ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

உயிரே உனை தேடுகிறேன் ......



காணும் இடங்களில் எல்லாம்
கவிதை படிக்கிறேன் !

ஒ ரயிலே ! மெதுவாக போ ஒன்றும் அவசரமில்லை 
என்னோடு அவள் நினைவுகள் ....
எவரோ எழுதிய கவிதைகளில்
என்னவளின் நினைவுகள்.

என்னை விட அழகாய் உன்னை ரசித்தது 
உன் வீட்டு கண்ணாடி .....
ஏதோ புத்தகத்தில் எதார்த்தமாய்
உன் நினைவுகள் .

சாலை ஓர பலகையில் ...
விபத்து பகுதி பார்த்து கடக்கவும் !

பார்க்காமல் கடந்து  இருக்கலாம் உன் கண்களை
விபத்தில் பறிகொடுத்த இதயத்தோடு


காணும் இடங்களில் எல்லாம்
கவிதை படிக்கிறேன் !..............
                    

                  சாமுராய் .........