
உன்னை மறக்க முயல்கிறேன் முடியவில்லை ………..
உன்னை வெறுக்க முயல்கிறேன் முடியவில்லை …………
என்னை அறியாமலே உன்னை விரும்புகிறேன் ……….
என்னை அறியாமலே உன்னை காதலிக்கிறேன் ….
என் மனதில் உன்னை வைத்து பூசித்தேன் …….
என் மனம் அழுகின்ற வேளையில்….
உள்ளிருக்கும் நீ நனைவாய் என்ற தயக்கம்-அதனால்
உள்ளத்தால் பொய் சிரிப்பு சிரிக்க கற்றுக்கொண்டேன் ……..
என் உணர்வை உன்னிடம் சொல்ல தவித்தேன்-ஆனால்
என் வார்த்தைகள் சொல்லும் வேளையில்,
உன் மனம் தவிக்குமே என்ற பயம்-அதனால்
உள்ளத்தால் என் உணர்வை பொய்யாக்க கற்றுக்கொண்டேன் …….
இதற்கு மேல் உனக்காக பொய்யாக்க …,
என்னிடம் எதுவுமில்லை ….,
இதற்கு மேல் நான் நானாக இல்லை …,
இனியும் கொடுக்க இருப்பதெல்லாம் ஒன்று தான் - என் உயிர்
அதும் உனதாகி நெடுநாள் ஆகிவிட்டது …….
