செவ்வாய், 4 மே, 2010

அமானுஷ்யம்_என் வாழ்வில்?!



நம்பினால் நம்புங்கள் .....!

அது என் பள்ளி பருவம். பத்தாவது படித்துக்கொண்டு இருந்த நேரம். அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற கனவு. அதனால் நைட் study என்பது பழகி போன விஷயம் எனக்கு. இரவின் தனிமையை போக்க டிவி - இல் மெல்லிய ஓசையில் பாடல்கள் கேட்டுக்கொண்டு படிப்பது வாடிக்கை. இரவில் வீட்டில் எல்லோரும் உறங்கிய பிறகும் என் கடமை தொடரும்.

அன்றும் அப்படித்தான்., ஒரு மணிக்கு மேலையும் என் கடமை தொடர்ந்தது, பாடலை கேட்டுக்கொண்டு. இரண்டு மணியளவில், என் கடமையை முடித்து கொண்டு டிவி-யை அணைத்து விட்டு, தண்ணீர் அருந்திவிட்டு, படுக்கைக்கு சென்றேன். தூங்கிவிட்டேன்அந்த இனிய இரவில்.

பள்ளிக்கு சென்று திரும்பிய அந்த மாலைப்பொழுதில், எனக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. வீடு திரும்பிய நான் பசி மயக்கத்தில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். அப்பொழுது என் தம்பி, எனக்கு அருகில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். அவன் கேட்ட கேள்வி தான் எனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "என்ன அக்கா, ராத்திரி படுக்கபோகும் போது டிவி-யா ஆப் பண்ணாம தூங்கிட்ட. அதுலயும், சவுண்ட் வேற ஹை பிட்ச்-ல வச்சுட்டு". பகிர் என்று இருந்தது எனக்கு. "இல்லடா தம்பி, ஆப் பண்ணிட்டு தான் தூங்கினேன்", என்று அடித்து சொல்லியும் என் தம்பி கேட்டார் போல் இல்லை. எவ்வொலோ தடவை சொல்லியும், இதில் என்னை நம்ப யாரும் முயற்சி செய்யவில்லை. என்னை நானே நொந்துகொண்டேன். என் அம்மாஅந்த நேரத்தில் எனக்கு சப்போர்ட் பண்ணி பேசினார். " விடு பாப்பா, டிவி- ஆப் பட்டன் சரி இல்லாமல் இருந்து இருக்கும். நீ கவலைப்படாத" என்றார்.
கை கழுவிவிட்டு என் அறைக்கு திரும்பிக்கொண்டு இருந்த நேரம், என் அம்மா செல் போன்-இல் பேசிக்கொண்டு இருந்தது கேட்க முடிந்தது. " நீ சரியாய் தான் சொல்லி இருக்க. பாப்பா அதிகமா படுச்சு, என்னமோ ஆய்டுச்சு. இனிமேல் avalla ஜாக்ரதிய பாத்துக்கணும்" enraar. ennaku alugaiye vandhu vittadhu. ammavum namba villaye ennai. anrilirundhu, night study-yai vitten.