வியாழன், 13 மே, 2010

என்னவனுக்கு மடல்!!!!!!!!!!!!

உன்
நினைவே
தவமாக.....!
உன்னை
பார்ப்பதே
வரமாக....!
உன்
பிரிவே
சாபமாக....!

வெந்துகொண்டு
இருக்கிறேன்
உன்
நினைவால்...!
நொந்துகொண்டு
இருக்கிறேன்
உன்
பிரிவால்....!
தீயில்
நிற்கவைத்து
எரிக்கிறது
உன்
ஞாபகம்....!

ஒவ்வொரு
நாளும்
ரணமாக
தெரிகிறது
உன்னை
சுமந்துகொண்டு
இருப்பது.....!

உன்னை
பார்த்த
என்
கண்களை
சபித்துக்கொண்டு
இருக்கிறேன்....!

உன்னை
சுமந்த
நெஞ்சத்தை
மண்ணிற்கு
இரையாக்கி
விடவா
என
பிதற்றுகிறேன்....!

உன்னை
பார்த்த
பின்பு தான்
தோன்றியது
கனவோடும்
வாழலாமேன்ரும்...,
நினைவோடும்
சாகலமேன்றும்....!

வாழ்ந்தும்
வாழாமல்
இருக்கிறேன்....!
சாகும்
எண்ணம்
எழாமலில்லை ....!

ஒருமுறையாவது
பார்த்து
விடுகின்றேன் ....!
எனக்காக
உன்
கண்கள்
கண்ணீர்
சிந்துவதை....!
என்
மரணத்திற்காக....!

அது மட்டுமாவது,
என்
வாழ்வின்
பயனாக
இருக்கட்டும்....!
என்
அன்பின்
உயிரே..............!

இப்படிக்கு,
பேசும் விழியால்.